அஞ்சலி குழந்தையை கலைக்க சொல்லும் டாக்டர் – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

0
அஞ்சலி குழந்தையை கலைக்க சொல்லும் டாக்டர் - இன்றைய 'பாரதி கண்ணம்மா' எபிசோட்!
அஞ்சலி குழந்தையை கலைக்க சொல்லும் டாக்டர் - இன்றைய 'பாரதி கண்ணம்மா' எபிசோட்!
அஞ்சலி குழந்தையை கலைக்க சொல்லும் டாக்டர் – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று அஞ்சலியின் குழந்தையை கலைக்க சொல்லி மருத்துவர் கூறி விடுகிறார். இதனால் பயந்து விடும் அஞ்சலி தனது உயிர் போனாலும் பரவாயில்லை, தனது கருவினை அழிக்க மாட்டேன் என்று மருத்துவரிடம் திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையினை கலைத்தால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து விடும் அஞ்சலி, தான் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும், இதனால் தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று கூறி விடுகிறார். பின், இது குறித்து குடும்பத்தினரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் முடிவு எடுக்கிறார்.

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் கவனத்திற்கு – புதிய தனியுரிமை அப்டேட்!

இப்படியாக இருக்க, சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது பாரதி வந்து கண்ணம்மாவிடம் பேசியது குறித்த அனைத்தையும் ஹேமா கூறிவிட்டதாக தெரிவிக்கிறார். பின், பாரதி மற்றும் வெண்பா இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர். அப்போது பாரதி, கண்ணம்மா ஹேமாவை கடத்தியதாக தான் நினைத்தது தவறு என்று வெண்பாவிடம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து விடும் வெண்பா அப்படியெல்லாம் இருக்காது கண்ணம்மா தான் ஹேமாவை தானே கடத்தி விட்டு காப்பாற்றியதாக நாடகமாடுகிறார் என்று பாரதியிடம் கூறுகிறார். இதனை மறுக்கும் பாரதி தானும் முதலில் அப்படி நினைத்ததாகவும், தற்போது ஹேமா கூறுவதை கேட்கும் போது வேறு மாதிரி தோன்றுகிறது என்று கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

கண்ணம்மா, ஹேமா தனக்கு பிறக்காத பிள்ளை என்றாலும் எதனால் தனக்கு ஹேமாவை இவ்வளவு பிடித்து இருக்கிறது என்று நினைத்து குழம்புகிறார். அதே போல் ஹேமா தனது வீட்டில் சமையல் அம்மா என்று பொம்மையை வைத்து தனியாக பேசிக் கொண்டு இருக்கிறார். இதனை பார்க்கும் வேணு ஹேமாவிடம் வந்து விசாரிக்கிறார். அப்போது ஹேமா தனக்கு சமையல் அம்மாவை பிடிக்கும் என்றும் அவரை விட்டு அமெரிக்கா போக இருப்பது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். இதனால் வேணுவிற்கு கண்கள் கலங்குகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here