தமிழக ரயில்வேயில்(CMRL) Supervisor வேலை 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Supervisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
CMRL காலிப்பணியிடங்கள்:
Supervisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Supervisor கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CMRL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RRB-ல் Technician வேலைவாய்ப்பு 2025 – 6230+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
Supervisor ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.26,660/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
CMRL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.06.2025, 03.06.2025, 04.06.2025, 07.06.2025, 08.06.2025, 09.06.2025ம் தேதி நடைபெறும் Screening Test-ல் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























