
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை பேரணி.. தமிழக முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் “பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை (10-05-2025) பேரணி நடைபெற உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்”.
IDBI வங்கியில் Junior Assistant Manager வேலை – 670+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “நாளை மாலை 5 மணிக்கு, சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நிறைவடையும்” என்றும், இந்த பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

























