இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. IPL போட்டிகள் ஒத்திவைப்பு.. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்..!!

0
???????- ?????????? ???? ??????? ???????.. IPL ????????? ???????????.. BCCI ????????? ??????? ?????..!!
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. IPL போட்டிகள் ஒத்திவைப்பு.. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்..!!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. IPL போட்டிகள் ஒத்திவைப்பு.. BCCI வெளியிட்ட முக்கிய தகவல்..!!

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரித்தால் (BCCI) ஆண்டுதோறும் நடத்தப்படும் IPL போட்டியின் 18 வது பதிப்பானது தற்போது பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால் IPL போட்டிகளை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று (09-05-2025) முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என BCCI நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு IPL தொடர் ஒத்திவைக்கப்படுவதாக BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை பேரணி.. தமிழக முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!!

அதன்படி “இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டிற்கான IPL தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என BCCI தெரிவித்துள்ளது. மேலும், தரம்சாலாவில் “நேற்று (08-05-2025) நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பதான்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அப்போட்டி ஆனது ரத்து செய்யப்பட்டு இரு அணி வீரர்களும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!