
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு…நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிரடி
தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் கூடியது. இதையடுத்து, இரண்டாவது சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. மேலும், நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.
மேலும், இந்த மாநில பட்ஜெட்டில் கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட வரவுகள், செலவுகள், கடன் விவரங்கள் மற்றும் அதற்காக அரசு செலுத்தும் வட்டிகள் ஆகியவை குறித்து விவரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025 -2026 யை (Economic Survey of Tamilnadu 2025 -2026)” தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது , இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.























