முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. தொண்டர்களுக்கு பறந்த கடிதம்.. முழு விவரம் உள்ளே!!
தமிழகத்திற்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். இன்று அமெரிக்கா புறப்படுவதை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன் பறக்கிறேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய் வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்.
அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முழு பயணத் திட்டம் இதுதான்.. விவரம் உள்ளே!!
முதலமைச்சர் அயல்நாட்டுச் சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைப்படாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்த சான்றிதழை அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
























