
மெட்ரோ டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்..!! விரைந்து செயல்பட்டு சிக்கலை தீர்த்த மெட்ரோ நிர்வாகம்…!!
இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல மணி நேரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மெட்ரோ டிக்கெட் பெறுவதில் இன்று சிக்கல் ஏற்பட்டது
அதாவது, மெட்ரோ ரயில் டிக்கெட் பெற பயணிகள் கூட்ட நெரிசலில் வெகு நேரம் காத்திருப்பதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் செயலி வாயிலாக டிக்கெட்டுகளை எடுக்கும் வசதியை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில்களில் வாட்ஸ்அப் செயலி மூலமாக டிக்கெட் பெறும் வசதி இன்று (08-03-2025) காலை முதல் இயங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான மீட்பு பணிகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இனிமேல் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை வழக்கம் போல பெற்று கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது























