டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு – ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!!

0
டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு - ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!!
டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு - ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!!
டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு – ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!!

இந்தியாவில் மிகசிறந்த கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆன்லைன் மூலமாக பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

டேட்டா சயின்ஸ் படிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்த காலம் முடிவடைந்து தற்போது ஆன்லைன் மூலமாக அனைத்து படிப்புகளையும் தங்களது வீடு தேடி படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் மிக சிறந்த கல்வி நிறுவனமான சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் மிகுந்த டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு ஆன்லைன் மூலமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த படிப்பு படிப்பதன் மூலமாக, கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் அறிவியல் போன்ற துறைகளின் பண்பாட்டுடன் தகவலை ஒழுங்குபடுத்துதல், பகுப்பாய்தல், அதனை முறையாக பயன்படுத்துதல் என பல நிலைகள் உள்ளன. இதன் மூலமாகவே வீட்டில் இருந்து ஆன்லைன் பயன்படுத்தி உணவு பொருள்கள், வாடகை வாகனம், சேவை பயன்பாடுகள் என பல்வேறு பணிகளை நாம் எளிதாக செய்கிறோம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை விளக்கம்!!

இந்த பயன்பாடுகள் அனைத்திற்கும் ‘டேட்டா சயின்ஸ்’ பங்கு மிக அவசியமாக உள்ளது. எனவே பல்வேறு நிறுவனங்களில் இந்த படிப்பிற்கான தேவை அதிகமாக உள்ளது. மேலும் சென்னை ஐஐடியில் இதற்கான சான்றிதழ், டிப்ளமோ, மற்றும் பட்டபடிப்புகளும் உள்ளன.  இந்த படிப்புகளுக்கு ரெகுலர் என்ட்ரி மற்றும் டிப்ளமா என்ட்ரி என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு – கல்வியாளர்கள் வேதனை!!

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகளை படித்திருக்க வேண்டும். இந்த படிப்பிற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. எனவே ஏற்கனவே ஒரு பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இணை படிப்பாக இந்த படிப்பை படிக்கலாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!

இந்த படிப்பிற்கு குவாலிபயர் 1, பவுண்டேஷன், குவாலிபயர் 2 மற்றும் குவாலிபயர் 3 ஆகிய தேர்வுகள் வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே இதற்கான தேர்வு தேதி மாறுபடும். இதற்கு தகுதியானவர்கள் https://www.onlinedegree.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!