சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு – கொலீஜியம் பரிந்துரை!!

0
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு - கொலீஜியம் பரிந்துரை!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு - கொலீஜியம் பரிந்துரை!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு – கொலீஜியம் பரிந்துரை!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 4 மாவட்ட நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 58 பேர் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார். அதன்படி, முகமது ஷபீக், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார், டி.பரத சக்ரவர்த்தி, ஜெ.சத்யநராயண பிரசாத் உள்ளிட்ட நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அரசு இ – சேவை மையம் தொடங்க வேண்டுமா? – இது உங்களுக்கான பதிவு தான்.. முழு விவரங்கள் உள்ளே!

இந்த நிலையில், மீண்டுமாக 4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் பி.தனபால், ஆர்.சக்திவேல், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் உள்ளிட்ட நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 62 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!