அரசு இ – சேவை மையம் தொடங்க வேண்டுமா? – இது உங்களுக்கான பதிவு தான்.. முழு விவரங்கள் உள்ளே!

0
அரசு இ - சேவை மையம் தொடங்க வேண்டுமா? - இது உங்களுக்கான பதிவு தான்.. முழு விவரங்கள் உள்ளே!
அரசு இ - சேவை மையம் தொடங்க வேண்டுமா? - இது உங்களுக்கான பதிவு தான்.. முழு விவரங்கள் உள்ளே!
அரசு இ – சேவை மையம் தொடங்க வேண்டுமா? – இது உங்களுக்கான பதிவு தான்.. முழு விவரங்கள் உள்ளே!

தமிழகத்தில் அனைவருக்கும் இ – சேவை மையம் என்ற திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.

இ – சேவை மையங்கள்:

தமிழக மக்கள் அரசின் இ – சேவை மையங்கள் வாயிலாக மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 40 வகையான சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அனைவருக்கும் இ – சேவை மையம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Aadhar New Update: கைரேகை பதிவு முறையில் பாதுகாப்பு அம்சம் அறிமுகம் – UIDAI அறிவிப்பு!

இதன் கீழ் இ-சேவை மையங்கள் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இத்திட்டம் படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசின் அனைவருக்கும் இ – சேவை மையம் என்ற திட்டத்தின் கீழ் இ – சேவை மையங்கள் அமைக்க விரும்புவோர்கள் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக 14.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பக்கட்டணமாக கிராமபுறத்தில் இ -சேவை மையம் தொடங்குவோர் ரூ. 3000 செலுத்த வேண்டும். மேலும் நகர்புறத்தில் இ -சேவை மையம் தொடங்கவுள்ளோர் ரூ. 6000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களில் தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட்டு இ – சேவை மையம் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். தேர்தெடுக்கப்படுவோர்களுக்கு இ – சேவை மையத்திற்கான ஐடி மற்றும் பாஸ்வேர்டு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!