குடிநீர், கழிவுநீர் வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை..!! ” தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!
மக்கள் உபயோகிக்கும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை குடிநீர் வாரியம் நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் சொத்து உரிமையாளர்கள், காலவரையறைக்குள் சரியான முறையில் வரி செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுமுதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதிக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (02.10.24) மின்தடையா?? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!


























