8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு!
குற்ற வழக்கு தொடர்வுத் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.18,000/-
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























