IND vs BAN 2nd Test: சுழலில் சிக்கிய பங்களாதேஷ்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணும் சச்சின்.. வெளியான முக்கிய அப்டேட்!!
இதனால் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.


























