ரூ. 500 கேஸ் சிலிண்டர் மானியம், விவசாய கடன் தள்ளுபடி – அள்ளிவீசப்படும் அறிவிப்புகள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தரப்பின் வாக்குறுதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி அன்று சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 500 மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, ஜாதிவாரியான கணக்கெடுப்பு, நெல் குவிண்டனுக்கு ரூபாய் 3200-க்கு கொள்முதல் மற்றும் வீடுகளை சேகரிப்போருக்கு ஒரு மூட்டைக்கு ரூபாய் 6 ஆயிரம் விலை.
நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!
மேலும் ஆண்டுக்கு நான்காயிரம் ரூபாய் போனஸ் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் இது குறித்து பேசுகையில் ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு பின்னர் பின் தங்கிய வகுப்பினருக்கான சிறப்பு கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.