குடியரசு தலைவருக்கு காலக்கெடு..!! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர உள்ள மத்திய அரசு..!!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாக, அவரது செயல்களை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களை சட்டமாக்க உத்திரவிட்டதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கவும் ஆணையிட்டது. மேலும், இந்த வழக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதத்திற்குள் குடியரசு தலைவர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது. தற்போது இதுதொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
அதாவது, குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என். ரவி மீதான வழக்கில் குடியரசு தலைவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் போது அவரின் வாதத்தை கேட்கவில்லை எனவும், குடியரசு தலைவர் பிரதிவாதியாக இல்லாத வழக்கில் அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.


























