இனி அனைத்து பள்ளிகளிலும் புதிய வாரியம் அமைக்க வேண்டும்.. CBSE அமைப்பு விதித்த அதிரடி உத்தரவு..!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) என்பது மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த வாரியம் ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நிர்ணயித்து, பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. இந்நிலையில் CBSE பள்ளிகளில் “சுகர் போர்டு” எனப்படும் செயல்படுத்தி குழந்தை பருவ நீரிழிவு நோயின் ஆபத்தான அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த “சுகர் போர்டு” ஆனது அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மே 31 தான் கடைசி தேதி., என்ன தகவல் உடனே பாருங்க!!
மேலும், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோயின் சுமையை குறைத்து சுகாதார எழுத்தறிவின் மதிப்பை வலியுறுத்துகிறது. இது குறித்து கடந்த மே 14 ஆம் தேதி அன்று CBSE வெளியிட்ட சுற்றறிக்கையில், “4-10 வயதுடைய குழந்தைகள் தங்கள் தினசரி கலோரிகளில் 13% க்கும் அதிகமானவற்றை சர்க்கரையிலிருந்து பெறுகிறார்கள் என்றும், 11-18 வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 15% உட்கொள்கிறார்கள்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கல்வி செயல்திறனையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்றும் CBSE வாரியம் வலியுறுத்தியுள்ளது. இந்த முயற்சி, “குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (NCPCR) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக அதிகப்படியான சர்க்கரை நுகர்வுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்களை அனைத்து பள்ளிகளும் நிறுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது”.



























