ஐரோப்பாவின் டீசல் தேவையில் 60% இந்தியா வழங்கியது
ஆகஸ்ட் 2026-ல் ஐரோப்பாவை நோக்கி Bab-el-Mandeb வழியாக சென்ற டீசல் மற்றும் கேஸாயில் சரக்குகளில் சுமார் 60% இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களிலிருந்து வந்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.
சுமார் 2 லட்சம் பேரல் டீசல் மற்றும் கேஸாயில் தினசரி இந்த கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி சென்றதாக Vortexa தரவுகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் ஏற்றுமதி குறைந்ததும், அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதியும் சரிந்ததும் இந்தியாவுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு திறன் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருகிறது.



























