அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை கிடையாது – பிஜி அரசு!
தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்று பிஜி நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
தடுப்பூசி
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த நோய் பரவலுக்கான காரணத்தையும், தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இப்படியாக இருக்க, பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர். தடுப்பூசிகள் மூலமாக ஒரு சிலருக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்படுகிறது என்றும் பலருக்கும் இதன் காரணமாக எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழக அறநிலைத்துறை கோவில்களில் CA படித்தவர்களுக்கு பணி – அமைச்சர் தகவல்!
பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது பிஜி நாட்டின் பிரதமர் பிராங்க் பைனிமராமா தனது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த ஒரு அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது அங்கு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை போட்டிருத்தல் அவசியம் என்று தெரிவித்துள்ளார். இதனை செய்ய மறுப்பவர்கள் அரசின் சார்பாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸினை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால் ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதன் நன்மை குறித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.