Airtel, Jio & VI பயனர்கள் கவனத்திற்கு – 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
பிஎஸ்என்எல் புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றினை 45 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதே போல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் வழங்கும் திட்டங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ரீசார்ஜ் திட்டங்கள்
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் பிஎஸ்என்எல் பல விதமான ரீசார்ஜ் பிளான்களை தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. அதில் அரசிற்கு சொந்தமான நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தங்களது பயனர்களுக்கு என்று 45 ரூபாயில் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை கிடையாது – பிஜி அரசு!
இந்த திட்டம் 45 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் அம்சங்களாக வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
100 ரூபாய்க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள்
ஏர்டெல் டாக் டைம் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு என்று 45, 49 மற்றும் 79 ரூபாயில் டாக் டைம் திட்டங்களையும் வழங்குகிறது. 49 மற்றும் 79 ரூபாயில் உள்ள திட்டங்கள் முறையே 100 மற்றும் 200 எம்பி வழங்குகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
டேட்டா பேக்
ஏர்டெல் நிறுவனம் 48 ரூபாய்க்கு டேட்டா மட்டும் வழங்குகிறது. 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
98 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் டேட்டா மட்டும் ரீசார்ஜ் ஆகும். மேலும் 12 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
TN Job “FB
Group” Join Now
Vi வோடபோன்
ரூ48 டேட்டா பேக் இது டேட்டா மட்டும் ரீசார்ஜ் செய்து 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தொலைபேசி அல்லது இன்டர்நெட் சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்தால் இந்த திட்டம் 200 எம்பி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
Vi ரூ 98 டேட்டா பேக், இது இரட்டை தரவு சலுகை ( double data offer) ஆகும். 28 நாட்களுக்கு 12 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
Vi ரூ 99 திட்டம் Vi சமீபத்தில் 99 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸை 18 நாட்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் 109 ரூபாய் திட்டம் 20 நாட்களுக்கு அதே நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ
ஜியோ ரூ 51 4 ஜி டேட்டா வவுச்சர், இந்தத் திட்டம் 65 ஜி.யூ.சி நிமிடங்கள் கால்ஸ் நன்மைகளுடன் 6 ஜிபி வரை டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ 10, 20, 50 மற்றும் 100 ரூபாய் வவுச்சர்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 5 ஜிபி மற்றும் 10 ஜிபி ஆகியவற்றை டாக் டைம் சலுகைகளுடன் வழங்குகிறது.