ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

1
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பீகார் மாநில அரசு வருகிற ஜூன் 23ம் தேதி முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது. இவை அனைத்தும் ஜூலை 6 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்து தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தங்களது பாதிப்பு நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கை அமல்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பல்வேறு மாநில அரசுகளும் தீவிர கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தின. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தற்போது பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து கொண்டே வருகின்றன.

SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!

அந்த வகையில் பீகார் மாநில அரசு ஜூன் 23ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது. அதன்படி அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் இரவு 7 மணி வரை திறந்திக்கலாம் என்று முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார். பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஜூலை 6 வரை இந்த தளர்வுகள் அமலில் இருக்கும்.

தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

திருமண விழாக்களில் அதிகபட்சம் 25 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், இரவு 9 முதல் காலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். முகக்கவசம் அணிதல், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் LPG சிலிண்டர் மானியம், நகைக்கடன் தள்ளுபடி? அரசுக்கு கேள்வி!

பீகார் மாநில அரசு முதலில் மே 5 முதல் 15ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது. பின்னர் அதனை மே 25 வரை நீட்டித்தது. மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு பலவித தளர்வுகள் வழங்கப்பட்டு படிப்படியாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் வீதமும் தினசரி அதிகரிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Arasangam oru oru mothamamaka 144 potu poiketta iruntha job ku poga mudiyama iruka middle class family tha romba kasta padurom bank lone muttum motha motham kattanum ana engaum poga kudathu apm epdi sir vadi katturathu sollunga

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!