தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

0
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ள நிலையில், புதிய ரேஷன் அட்டை பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

புதிய ரேஷன் அட்டை:

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெற முக்கிய ஆவணமாக குடும்ப அட்டை உள்ளது. தற்போது கொரோனா நிவாரணம் ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச பொருள்கள் ரேஷன் அட்டை மூலமாகவே வழங்கப்படுகிறது. இது அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் பெற மட்டும் அல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் விண்ணப்பிக்க முக்கிய ஆவணமாக உள்ளது.

சென்னையில் ஜூன் 22ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு விவரம்!

தனியாக வீடு பார்த்து செல்லும் குடும்பத்திற்கு எவ்வாறு புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பது என்பது குறித்து குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலமாக எளிமையாக விண்ணப்பிக்கலாம். அதற்கு குறிப்பாக விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை open செய்ய வேண்டும்.
  • அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அது மற்றொரு பக்கத்தில் தொடரும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ், ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
  • அதன் பின்னர் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி ஆகியவற்றை வழங்க வேண்டும்.
  • அதோடு அப்ளிகேஷனில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் 5 எம்பி அளவில் உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும்
  • எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களில், எண்ணெய் நிறுவனம் எது என கொடுக்கவும். உங்களிடம் ஒரு இணைப்பு மட்டும் உள்ளது எனில் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டு இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat). ஒவ்வொன்றிலும் எத்தனை சிலிண்டர்கள் என கொடுக்கவும்.
  • அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயர் கொடுக்க வேண்டும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும்
  • அதில் பூர்த்தி செய்யாத பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் என ஏதேனும் விவரத்தை பூர்த்தி செய்யலாம்.
  • கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் யாரை சேர்க்க வேண்டும்? குடும்ப தலைவருக்கு என்ன முறை? அதாவது மகன் மகள், மனைவி என்பதை கொடுக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதன் பின்னர் சேமி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். மேலும் கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுக்க வேண்டும்
  • அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கொடுக்க வேண்டும்.
  • நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது ரெட் கலரில் காண்பிக்கும்.
  • இறுதியாக உறுதி என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும்.
  • இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் (TSO) கொடுக்க வேண்டும். அதன் பின்னர் உங்களது அப்ளிகேஷன் விரைவில் பரிசீலிக்கப்படும்.
  • நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!