மூத்த குடிமக்கள் & பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்கள் – உடனே படியுங்கள்!

0
மூத்த குடிமக்கள் & பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்கள் - உடனே படியுங்கள்!
மூத்த குடிமக்கள் & பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்கள் - உடனே படியுங்கள்!
மூத்த குடிமக்கள் & பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்கள் – உடனே படியுங்கள்!

இந்திய அஞ்சல்துறை மூலம் மூத்த குடிமக்களுக்கும், பெண்களுக்கும் நிதி பாதுகாப்பை வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய திட்டங்கள்

இந்திய மக்கள் எதிர்காலத்தில் நிதி சுமையில் இருந்து தப்பிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கும், பெண்களுக்கும் நிதி பாதுகாப்பிற்காக பல சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கிய திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – Senior Citizen Savings Scheme (SCSS) மற்றும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்திட்டம் (Mahila Samman Savings Certificate MSSC Scheme) திட்டம் குறித்து பார்க்கலாம்.

இதில் மூத்த குடுமக்கள் சேமிப்பு திட்டம் என்பது ஓய்வூதிய நன்மை திட்டம் ஆகும். இது அவர்களுக்கு ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய உதவுகிறது. முதலீட்டாளர்கள் 60 வயதை கடந்த பின் வழக்கமான வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நிதி சேர்க்கையை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.

உஷார் மக்களே ..போலி இணையதளம் மூலம் பட்டாசு விற்பனை – எச்சரிக்கும் சைபர் கிரைம்!

ஆன்லைன் மூலம் திறப்பது எப்படி?
  • முதலில் அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவர்களின் DOP இணைய வங்கிக்குச் செல்ல வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் General Services என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் Service Requests என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் திரையில் New Requests ஆப்ஷனை க்ளிக் செய்து ஓகே பட்டனை அழுத்த வேண்டும்.
  • அடுத்ததாக SCSS Accounts – Open a SCSS Account’ அல்லது MSSC Accounts – Open a MSSC Account என்பதில் உங்களுக்கு தேவையான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் முதலீட்டுத் தொகை உங்கள் போஸ்ட் ஆபீஸுடன் இணைந்துள்ள வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டும். பின் agree to all the terms and conditions டிக் செய்ய வேண்டும்.
  • பிறகு திரையில் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும். இறுதியாக அந்த பணப் பரிவர்த்தனைகளை செக் செய்து கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டு பதிவு செய்து சப்மிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு உங்கள் சேமிப்பு கணக்கு ஆன்லைன் மூலம் திறக்கப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!