முதலீடு செய்யணும்னு ஆசையா? இது தான் சூப்பர் பிளான்!
இந்திய தபால் துறையானது நாட்டு மக்களுக்கு உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு அதிக லாபம் கொடுப்பது செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் நல்ல வட்டியுடன் வரிச்சலுகையும் வழங்கப்படும்.
BSNL நிறுவனத்திற்கு குவியும் வாடிக்கையாளர்கள் – காரணம் தெரியுமா?
பெண்ணுக்குத் திருமணம் ஆகும் நேரத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணம் துணை நிற்கும். தபால் அலுவலகத்திலோ வங்கியிலோ இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்து கணக்கை ஆரம்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம். உதாரணமாக, மாதம் சுமார் ரூ.8 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 8.2 சதவீத வட்டியுடன் முதிர்வு தொகையாக ரூ. 46.65 லட்சம் கிடைக்கும்.























