BSNL நிறுவனத்திற்கு குவியும் வாடிக்கையாளர்கள் – காரணம் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. எனவே முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வேலிடிட்டி முடிந்ததும் இன்கமிங் கால் வசதி பெறுவதற்கு பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது போன்ற சட்டத்தை அமல்படுத்தினார். எனவே நிறுவனங்கள் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கின.
மத்திய அரசில் Consultant வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியது. கட்டண உயர்வால், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களில் இருந்து 30 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புதிதாக 29 லட்சம் வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
























