பாகிஸ்தானுடன் மோத விருப்பமில்லை.. பஹல்காம் தாக்குதலை எதிர்த்து BCCI செய்த செயல்..!!
ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து பேசிய பிரதமர் மோடி, “இதன் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், “காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இனி நடக்கவிருக்கும் போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் வகையில், இனி இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் விளையாடாது என்று BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்”.


























