மகளிர் உரிமை தொகை குறித்து வெளியான ஜாக்பாட் அறிவிப்பு..!! இனி பெண்களுக்கு ஒரே குஷி தான்…!!
பெண்கள் தற்சார்ப்பு பெற்று சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு “கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்” தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுடன் மோத விருப்பமில்லை.. பஹல்காம் தாக்குதலை எதிர்த்து BCCI செய்த செயல்..!!
அதாவது, தமிழகத்தில் பல பெண்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் உரிய காரணங்கள் இன்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புகார்களில் உள்ள பிரச்சனைகள் கேட்டறியப்பட்டு, இத்திட்டத்தில் உள்ள குறைகள் தீர்க்கப்பபடும் என்று முன்னரே தெரிவித்தார். இந்நிலையில், இன்று பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வரும் ஜூன் மாதம் 4 ஆம் கட்டமாக 9000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என சட்டப்பேரவையில் அறிவித்தார்.
Join the ExamsDaily WhatsApp Group


























