IND vs BAN 2024 : முக்கிய தொடரில் பும்ராவுக்கு ஓய்வு?? பிசிசிஐ புதிய திட்டம்!!
இந்திய ஆடவர் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாடி வந்ததே நாம் அறிவோம். இந்த நிலையில் இதற்கு அடுத்த படியாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் ஹர்திக் பாண்டியா?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறக்கலாம் என்று பிசிசிஐ நிர்வாகம் திட்டம் வைத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பும்ராவுக்கு பதில் முகமது ஷமி இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


























