ஜிஎஸ்டி வரி கட்டாதவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு கொண்டு வந்த புதிய பிரிவு….!!!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், இந்த ஆண்டும் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி 54 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய ஜிஎஸ்டி கட்டணங்களுக்கு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி குறைவாக கட்டியவர்கள் மற்றும் ஜிஎஸ்டி வரி கட்டாமல் இருப்பவர்களுக்கு “பிரிவு 11ஏ” என்ற புதிய பிரிவின் மூலம் தீர்வு கொண்டுவர உள்ளது. இந்த புதிய விதியினால் ஜிஎஸ்டி வரிகளில் நடக்கும் திருட்டு போன்றவை தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதஞ்சலி நிறுவனத்தின் அவமதிப்பு வழக்கு…. 3 முறை மன்னிப்பு கேட்டாரா..???
மேலும், கடந்த ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் 10.3 சதவீதம் அதிகரித்து 1.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நாட்டில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் ஆகும். இதில், மத்திய அரசு மூலம் 32,386 கோடி ரூபாயும், மாநில அரசு மூலம் 40,289 கோடி ரூபாயும் மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 96,447 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.

























