லட்சுமியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதியை பார்க்க ஆசைப்படும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதியை பார்க்க ஆசைப்படும் ஹேமா - இன்றைய
லட்சுமியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதியை பார்க்க ஆசைப்படும் ஹேமா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதியை பார்க்க ஆசைப்படும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியை பார்க்க பாரதி வீட்டிற்கு கண்ணம்மா வருகிறார். அப்போது பார்தி வந்து லட்சுமி அம்மா அப்பா வரும் வரை இங்கே தான் இருப்பார் என சொல்கிறார். ஹேமா பாரதிக்கு போன் செய்து உங்களை பார்க்கணும் போல இருப்பதாக தெரிவிக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது கண்ணம்மா ஆட்டோவில் வந்து இறங்குகிறார். லட்சுமியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நீங்க எதாவது செய்து லட்சுமியை என்னுடன் அனுப்பி வைங்க என்று சொல்கிறார். பாரதி ஏன் இப்படி செய்கிறான் என்று தெரியவில்லை என சௌந்தர்யா சொல்ல, அவருக்கு லட்சுமி என் பொண்ணு தான் என்ற சந்தேகம் இருக்கு என்று சொல்கிறார்.

நாங்களும் அப்படி தான் நினைக்கிறோம். அதற்காக நம்ம வாய்ல அதை ஏன் சொல்ல வேண்டும் என சௌந்தர்யா சொல்கிறார். இப்போது வீட்டில் யாரும் இல்லை. நீ லட்சுமியை கூட்டிக் கொண்டு போ நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சௌந்தர்யா சொல்ல, லட்சுமியை பார்க்க உள்ளே செல்கின்றனர். அப்போது பாரதியின் கார் வர கை தட்டிக் கொண்டே பாரதி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

என்ன சமையல் அம்மா இங்கே வந்திருக்கீங்க, பக்கத்து வீட்டில் எதுவும் சமையல் செய்யவா என்று பாரதி சொல்கிறார். எல்லாம் பேசி முடிச்சுடீங்களா கிளம்ப வேண்டியது தான என்று பாரதி சொல்ல, அங்கிருந்து கண்ணம்மா கிளம்புகிறார். உடனே பாரதி சமையல் அம்மா என்று கூப்பிட்டு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து லட்சுமியை பார்க்காமல் போறீங்களே என்று சொல்லி லட்சுமியை அழைக்கிறார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை – 8 மடங்கு அதிகரிப்பு!

லட்சுமி வந்து அம்மா என கூப்பிட வருகிறார். உடனே மாற்றி சமையல் அம்மா என்று அழைக்கிறார். இங்க நான் நல்ல இருக்கேன், எனக்கு தேவையான எல்லாமே வாங்கி கொடுக்கிறாங்க, என்ன கூட்டிக் கொண்டு போக வந்திருக்கீங்களா சமையல் அம்மா, போவோமா என்று கேட்க பாரதி குறுக்கிட்டு உன் அப்பா அம்மா வந்ததும் அனுப்புறேன், அதுவரை நீ இங்க தான் இருக்க வேண்டும் என சொல்கிறார்.

உடனே லட்சுமி சோகமாக கண்ணம்மா பிரிய மனமில்லாமல் இருக்கிறார். பின்னர் பாரதி கண்ணம்மா பற்றி கோவமாக இருக்க லட்சுமி வந்து சாப்பிட வாங்க என்று கூப்பிடுகிறார். எனக்கு பசிக்கவில்லை நீ போ என்று பாரதி சொல்ல, கண்டா கண்ட நேரத்தில் சாப்பிட்டால் வயிறு கேட்டு போய்விடும் என நீங்க தான சொன்னீங்க என்று சொல்ல, அவள் சாரி கேட்கிறார். ஐயோ இவளுக்கு என்ன தெரியும் சின்ன புள்ளையிடம் கோவத்தை காட்டிட்டோமே என வருத்தப்படுகிறார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பின்னர் ஹேமா அப்பா ஏன் பார்க்க வரவில்லை என நினைத்து போன் செய்கிறார். கண்ணம்மா நம்பர் வந்ததை பார்த்து பாரதி கோபப்படுகிறார். ஹேமா டாடி என கூப்பிட சந்தோசமடைகிறார். நான் ரொம்ப சோகமாக இருக்கிறேன் என்று ஹேமா சொல்ல, ஏன் சமையல் அம்மா உன்னை திட்டுகிறாரா என்று கேட்கிறார். அதெல்லாம் இல்லை அவங்க என்ன நல்லா பார்த்துக் கொள்கிறார். ஆனால் உங்க எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு என்று சொல்ல இப்பவே கிளம்புகிறேன் என்று பாரதி சொல்கிறார்.

பின்னர் பாரதி இல்லாத நேரத்தில் வெண்பா மருத்துவமனையில் பாரதி கையெழுத்து உள்ள தாளை எடுக்கிறார். அதில் அஞ்சலி உயிரை பறிக்கும் மருந்தை எழுதி கொடுக்க போகிறாராம், அதனால் அஞ்சலிக்கு எந்த சந்தேகமும் வராது என நினைத்து சந்தோசப்படுகிறார். டேய் பாரதி நீ டாக்டருக்கு படிச்சு என்ன பிரயோஜனம், உன் கையெழுத்தே அஞ்சலிக்கு எமனாக போகிறது என நினைத்து சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!