Bank Holidays in September – அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை! முழு பட்டியல்!

0
Bank Holidays in September - அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை! முழு பட்டியல்!
Bank Holidays in September - அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை! முழு பட்டியல்!
Bank Holidays in September – அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை! முழு பட்டியல்!

செப்டம்பர் மாதத்திற்கான மொத்த வங்கி விடுமுறை நாட்களுக்கான பட்டியலை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரவிருக்கும் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறைகள் மாநில வாரியான முக்கிய தினங்கள், மத நிகழ்வுகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் போன்றவற்றை பொறுத்து மாறுபடும். ஏழு நாட்கள் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் போன்ற வார இறுதி நாட்களும் உள்ளன. அவை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!

எவ்வாறாயினும், செப்டம்பர் மாதம் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை ஆக இருக்கும். செப்டம்பர் 10ம் தேதியில் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படும். இது இம்மாதத்தின் முக்கிய விடுமுறை தினமாகும். இந்த விடுமுறை மொத்தம் ஒன்பது நகரங்களில் கொண்டாடப்படுகிறது. அவை அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி ஆகும்.

  • செப்டம்பர் 5 – ஞாயிறு
  • செப்டம்பர் 8 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – (கவுகாத்தி)
  • செப்டம்பர் 9 – தீஜ் (ஹரித்தாலிகா, கேங்டாக்)
  • செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி – (அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி)
  • செப்டம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை / விநாயகர் சதுர்த்தி 2 வது நாள் (பானாஜி)
  • செப்டம்பர் 12 – ஞாயிறு
  • செப்டம்பர் 17 – கர்ம பூஜை (ராஞ்சி)
  • செப்டம்பர் 19 – ஞாயிறு
  • செப்டம்பர் 20 – இந்திரஜத்ரா (கேங்டாக்)
  • செப்டம்பர் 21 – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாள் (கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)
  • செப்டம்பர் 25 – நான்காவது சனிக்கிழமை
  • செப்டம்பர் 26 – ஞாயிறு

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!