சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், ரோஜாவிடம் மாட்டிக் கொள்ளும் அனு!
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலில் அணு அர்ஜுன் விதித்திருந்த கண்டிஷனை மீறி பிரியாணி சாப்பிட்டு ரோஜா மற்றும் அர்ஜுன் இருவரிடமும் வசமாக சிக்கி கொள்கிறார்.
“ரோஜா” சீரியல்
சன் தொலைக்காட்சியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை பிடித்து இருக்கும் சீரியல் என்றால் அது, ரோஜா தான். இந்த சீரியலில் தற்போது அணு நினைவு இல்லாமல் இருப்பது போல அனைவரிடமும் நடித்துள்ளார் என்று அர்ஜுன் அனைவரிடமும் கூறி விடுகிறார். இருந்தும், பாட்டி மட்டுமே அனுவிற்கு ஆதரவாக இருக்கிறார். இதனால் கோபம் அடையும் அர்ஜுன் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் சில கண்டிசன்களை பின்பற்ற சொல்லுகிறார். அதாவது அனு இரண்டு நாட்கள் சாப்பிட கூடாது என்றும், வீட்டிற்கு தான் அழைத்து வரும் ஆட்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா – பங்களாவில் குடியேற்றம்!
இருந்தாலும், சரி என்று கூறி விடுகின்றனர். அனுவிற்கு ஆதரவாக பாட்டி காலையிலேயே யசோதாவை வைத்து தான் பிரியாணி சமைக்க சொல்லி இருப்பதாகவும், அதனை சாப்பிட்டால் பசிக்காது என்றும் கூறுகிறார். அனுவும் சரி என்று கூறி சமையல் அறையில் யாரும் இல்லாத போது சாப்பிடுகிறார். அப்போது யாராவது வந்தால், அவர்களை பாட்டி ஏதோதோ பேசி அனுப்பி விடுகிறார். இதனை கவனித்து விடும் அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரையும் அனுவை கையும் களவுமாக பிடித்து விடுகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
பின்னர், அனுவை அனைவர் முன்பும் அனு தனது கண்டிஷனை மீறி விடுகிறார் என்று கூறுகிறார். இதனால் அனு நொந்து விடுகிறார். அதே போல் செண்பகம் வந்து கூறினால் மட்டுமே தான் இந்த வீட்டில் இருக்க முடியும் என்று உணர்ந்து, சாக்ஷியிடம் கூறுகிறார். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தான் தருவதாக கூறுகிறார். சாக்ஷியும் சரி என்று கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.