பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா – பங்களாவில் குடியேற்றம்!

0
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா - பங்களாவில் குடியேற்றம்!
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா - பங்களாவில் குடியேற்றம்!
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா – பங்களாவில் குடியேற்றம்!

பரபரப்புகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லாத நடிகை வனிதா விஜயகுமார் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வலம் வருகிறது. அது அவர் “பவர்ஸ்டார்” ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொள்வது பற்றியது தான்.

நடிகை வனிதா விஜயகுமார்

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விஜய் உடன் “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்தவர் தான், நடிகை வனிதா விஜயகுமார். அதற்கு பின்பாக பெரிதாக எந்த ஒரு படவாய்ப்புகளும் அவருக்கு அமையவில்லை. இதனால் குடும்பம் குழந்தை என்று சென்று விட்டார். அதிலும் இருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இப்படியாக அவர் வாழ்க்கை சென்று கொண்டு இருக்க, அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவர் செய்த அராஜகங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டு இருந்தார். இதன் காரணமாகவே மிகவும் பிரபலமடைந்தார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – இணையத்தில் வைரல்!

இது இப்படியாக இருக்க, இந்த பொது முடக்கத்தின் போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரிடமும் சண்டையிட்டு பிரிந்து விட்டார். தற்போது இவர் தமிழ் சினிமாவின் நடிகரான “பவர்ஸ்டார்” ஸ்ரீனிவாசனுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முதலில், இவரும் பவர்ஸ்டாரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அது அனைத்தும் படத்திற்கான ப்ரோமோஷன் என்று பட குழுவினர் தெரிவித்து விட்டனர். இப்படியாக இருக்க வனிதா நடிக்கும் படத்திற்கு “பிக்கப்” என்று பெயரிட்டுள்ளனர். இவருடன் இந்த திரைப்படத்தில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

வனிதா, பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து கொள்வாராம். பின்னர், இவர்கள் இருவரும் ஒரு பேய் பங்களாவிற்கு சென்று மாட்டி கொள்வார்களாம். இருவரும் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்களாம். இந்த திரைப்படம் பவர் ஸ்டாருக்கு 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்றும் பெயர் வைக்க போகின்றனராம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!