மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு - விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு - விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!

மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதலாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்த காரணத்தால் கடந்த வருட மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்துறைகளில் செயல்பாடு தடைப்பட்டதால் அரசுக்கு வரிவசூல் குறைந்து மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் பொருளாதாரமும் வரலாறு காணாத அளவு சரிந்தது. இதனால் அரசு செலவினங்களை குறைத்து கொள்ள திட்டமிட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு மிச்சமான தொகை கொரோனா தடுப்பு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!

தற்போது கொரோனா பரவல் குறைந்து பொருளாதரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 17% ஆக இருந்த அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு 28 சதவீதமாக மாற்றப்பட்டது. இதனால் சம்பளம், ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பதால் அரசு ஊழியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் வரிசையாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தன. தமிழகத்தில் 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

செப்.8 வரை 11 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி இல்லை – சென்னை காவல்துறை!

இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே வழங்கப்படும் DA 28 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயரும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!