ஜனவரி .1 வரை பட்டாசு விற்பனைக்கு தடை.. அரசு அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே!!
தற்போது வெடிக்கப்படும் பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் மற்றும் இதர ரசாயனங்கள் கலந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக் கோரி நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பட்டாசு விற்பனை தொடர்பாக மாசு கட்டுப்பாட்டுக் குழு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்!!
அதாவது, டெல்லி முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மாசு கட்டுப்பாட்டுக் குழு தடை விதித்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


























