
மன்னிப்பு கேட்கும் ராதிகா, கோவத்தில் இருக்கும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவால் ஜெயிலில் ராதிகா இருக்க அதனால் பாக்கியா மீது அவருக்கு கோவம் வருகிறது. இந்நிலையில் பாக்கியா ராதிகா பேசாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுவதாக ஜெனி ராதிகாவிடம் சொல்கிறார். ராதிகா மன்னிப்பு கேட்க வர ஆனால் பாக்கியா அவரை சத்தம் போடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பாக்கியா மீது புகார் அளிக்கப்பட்டு போலீசில் கைது செய்யப்படுகிறார். அதனால் பாக்கியா மீது ராதிகா கோவமாக இருக்கிறார். எந்த தவறும் செய்யாமல் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் பாக்கியா எவ்வளவோ பேசியும் ஆனால் ராதிகா அதை நம்புவதாக இல்லை. இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் உங்களை நான் மறக்கவே மாட்டேன் என ராதிகா சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபி சதீஷ் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!
இன்றைய எபிசோடில் ஜெனி கோவிலுக்கு வர அங்கே ராதிகாவை பார்க்கிறார். அப்போது ராதிகாவிடம் ஆன்டி உங்களை பற்றி தான் அடிக்கடி சொல்லி கொண்டே இருக்கிறார். நீங்க பேசாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார். நீங்க தான் இந்த தொழில் தொடங்க காரணமாக இருந்தீர்களாம் ஆனால் நீங்களே அவரை புரிந்து கொள்ளாமல் பேசியதை நினைத்து தினமும் வருத்தப்படுவதாக ஜெனி சொல்கிறார். அதனால் ராதிகா பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார்.
ExamsDaily Mobile App Download
மறுபக்கம் ராதிகா பாக்கியா வீட்டிற்கு சென்று பேச முடிவு செய்கிறார். ஆனால் ராதிகாவை பாக்கியா நம்புவதாக இல்லை. அந்த சூழ்நிலையில் என்னை விட்டுவிட்டு சென்று விட்டீர்கள் என நினைத்து பாக்கியா ராதிகா மீது கோவமாக இருக்கிறார். அதனால் ராதிகா பாக்கியா இடையே மீண்டும் பெரிய விரிசல் வரப் போகிறது. அதை கோபி சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போகிறார். பல மாற்றங்கள் இனி பாக்கியா ராதிகா நட்பில் வர இருக்கிறது என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.