தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார்‌ வளைகுடா பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

22.04.2022: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.04.2022: தென்தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ExamsDaily Mobile App Download

24.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கள்ளக்குறிச்‌சி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.04.2022, 26.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்‌சி மழை பகுதி மாவட்டங்கள்‌,டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – உமாங் ஆப் மூலம் எளிய சேவைகள்!

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!