
பாக்கியாவிற்கு துணையாக நிற்கும் ராதிகா.. அவமானப்படுத்தும் ஈஸ்வரி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட, அதற்கு பாக்கியா தான் காரணம் என ஈஸ்வரி குறை சொல்கிறார். அப்போது பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா குரல் கொடுக்க இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் மாலினி விஷயம் ஜெனிக்கு தெரிய வர, அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பாக்கியாவிற்கு விஷயம் தெரிந்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது தான், ஜெனி செல்ல காரணம் என ஈஸ்வரி சொல்கிறார். ஈஸ்வரி உன்னால் தான் இந்த வீட்டில் இவ்வளவு பிரச்சனை, இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்காதே என சொல்கிறார்.
சிலிண்டருக்கான மானியம் மீண்டும் உயர்வு – மத்திய அரசு திட்டம்!!
பாக்கியா அதை அமைதியாக கேட்டு கொண்டிருக்க, உடனே ராதிகா என்ட்ரி கொடுக்கிறார். அவர் உங்களுடைய பேரன் செழியன் தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம், பாக்கியா இல்லை என சொல்கிறார். ஜெனி பற்றியும் இந்த குடும்பம் பற்றியும் செழியன் நினைக்கவில்லை என சொல்கிறார். பின் பாக்கியா வருத்தத்துடன் இருக்க, ராதிகா பாக்கியாவிற்கு காபி கொண்டு வந்து கொடுக்கிறார். ராதிகா பாக்கியா சேர்ந்துவிட, இனி தான் சீரியல் கதை சூடுபிடிக்க இருக்கிறது.