பாக்கியா வருகையால் சந்தோசப்படும் குடும்பத்தினர், குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியா வருகையால் சந்தோசப்படும் குடும்பத்தினர், குழப்பத்தில் இருக்கும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியா வருகையால் சந்தோசப்படும் குடும்பத்தினர், குழப்பத்தில் இருக்கும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியா வருகையால் சந்தோசப்படும் குடும்பத்தினர், குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டிற்கு வந்ததை நினைத்து கோபி குழப்பத்தில் இருக்கிறார். பின் ஈஸ்வரி, செழியன், இனியா, ஜெனி அனைவரும் பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வந்ததை நினைத்து சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டிற்கு வந்து குளிப்பதற்காக கோபி ரூமிற்கு வருகிறார். அப்போது கோபி இவ எப்படி இங்கே வந்தால் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். பாக்கியா எதுவும் பேசாமல் வந்து அலமாரியில் சேலை ஒன்றை தேடி எடுக்கிறார். பின் கோபியிடம் நான் குளிக்க வேண்டும் என சொல்ல, உள்ளே தான என கோபி சொல்கிறார். துணி மாற்ற வேண்டும் என சொல்ல, வெளியே போக வேண்டுமா என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். வெளியே சென்று யார் கூப்பிட்டும் வராமல் இருந்தாள் திடீரென ஏன் வந்திருக்கிறாள் என கோபி  நினைத்து பார்க்கிறார்.

துணி மாற்ற வேண்டும் என வெளியே போக சொல்கிறாள் ஒரு வேலை தவறாக முடிவு எடுக்க போகிறாளோ என நினைத்து உள்ளே செல்ல நினைக்கிறார். ஆனால் அப்படி எதுவும் இருக்காது என நினைத்து அவர் போகவில்லை. மறுபக்கம் ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா எல்லாரும் பாக்கியா மீண்டும் வந்ததை நினைத்து சந்தோசப்படுகின்றனர். அப்போது இனியா அம்மா வந்துட்டாங்க இனிமேல் இங்கேயே இருந்து விடுவார்கள் என சொல்லி சந்தோசப்படுகிறார். பின் எழில் வருகிறார் அவரிடம் ஈஸ்வரி பாட்டி பாக்கியா எதாவது பேசினாளா என கேட்க, இல்லை காலையில் வீட்டிற்கு வர வேண்டும் என சொன்னதாக எழில் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஜெனி, தாத்தா நீங்க சென்று கூப்பிட்டதால் தான் ஆன்டி வந்ததாக சொல்கிறார். எழில் தாத்தா வந்துவிட்டு போன பின் அம்மா வருத்தமாக இருந்தார் என்னை வெளியே கூட்டிக் கொண்டு போக சொன்னார். பீச் கூட்டிக் கொண்டு போனேன் என சொல்ல இனியா, நாங்க எல்லாரும் வருத்தத்துடன் இருக்கிறோம் நீங்க ஜாலியா பீச் போறீங்க என சொல்கிறார். பின் செல்வி அக்கா பீச் போக கூட இப்படி ஒரு நிலைமை வந்தால் தான் முடிகிறது என சொல்கிறார். பின் செழியன், அம்மா வந்துட்டாங்க இனி எதுவும் பேச வேண்டாம் என சொல்கிறார். அப்பாவும் இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டார். ராதிகாவும் கிளம்பிட்டார் எல்லாம் சரியாகிவிட்டது என சொல்கிறார்.

எழில், உனக்கு நடந்தது எல்லாம் சாதாரணமாக இருக்கிறதா என சொல்ல செழியன் ஒரு பிரச்சனை என்றால் சீக்கரம் விட்டுவிட வேண்டும் என சொல்கிறார். பின் ஈஸ்வரி, பாக்கியாவை நாம தான் பார்த்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். கோபியை சரியாக கவனிக்க வேண்டும். கோபி இரவு வீட்டை விட்டு வேறு எங்கேயும் தங்க கூடாது என ஈஸ்வரி சொல்கிறார். பின் தாத்தா அவன் சின்ன பையனா,  அவனை கண்காணிக்க வேண்டுமா என கேட்கிறார். பின் பாக்கியா அவன் கூடவே இருக்க வேண்டும். சரி செய்ய வழி இருக்கும் போது சரி செய்து வாழ வேண்டும் என சொல்கிறார்.

பின் இனியாவை ஸ்கூலிற்கு கிளம்ப சொல்ல ஆனால் இனியா, முடியாது நேரமாகிவிட்டது என சொல்கிறார். ஜெனி, நாளைக்கு கண்டிப்பாக ஸ்கூல் போக வேண்டும் என சொல்கிறார். பின் கோபி கீழே வர எல்லாரும் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். மறுபக்கம் செல்வி எழிலிடம், அக்கா என்ன இவ்வளவு சீக்கரம் வந்துவிட்டது என கேட்கிறார். அக்கா யார் தவறு செய்தாலும் சீக்கரம் மன்னித்துவிடுகிறது என சொல்கிறார். அக்கா அங்கையே இருந்துவிடும் என நினைத்தேன், ஆனால் இந்த முறையும் வந்துவிட்டது என சொல்கிறார்.

தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் விளக்கம்!

பின் ஜெனி, ஆன்டி இங்கே இல்லாமல் கஷ்டப்பட்டேன் என சொல்ல கோபி சார் தவறு செய்ததற்கு தண்டனை என எதுவும் இல்லையா என கேட்கிறார் செல்வி. அக்கா குளித்துவிட்டு வந்து சமையல் செய்வார் எல்லாரும் சாப்பிட்டு விட்டு அவங்க வேலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள் என சொல்கிறார். அம்மா அப்படி எல்லாம் இல்லை என எழில் சொல்ல, அப்போ நேராக போலீஸ் ஸ்டேஷன் தான் போயிருக்க வேண்டும். அக்கா ரோசம் இல்லாமல் பேச வந்தால் அப்பறம் நான் வேலைக்கே வரமாட்டேன் என சொல்கிறார் செல்வி.

பாக்கியா குளித்துவிட்டு புது புடவை கட்டிக் கொண்டு வந்து அழகாக தயாராகுகிறார். அவர் ரெடியாகி கீழே வர அனைவரும் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். கோபியும் இவள் என்ன இப்படி வந்திருக்கிறாள் என்பது போல பார்க்கிறார். ஈஸ்வரி, பாக்கியாவிடம் கோவிலுக்கு போறியா பாக்கியா என கேட்க கோபி நீயும் அவளுடன் சென்று வா என சொல்கிறார். அப்போது தாத்தா அவள் சொன்னாளா என கேட்க ஈஸ்வரி வேற எங்கே கிளம்பி இருப்பாள் என கேட்கிறார்.

நடந்ததெல்லாம் மறந்து கணவன் மனைவி என ஒற்றுமையாக வாழ வேண்டும் அதான் நல்ல குடும்ப வாழ்க்கை என சொல்ல பாக்கியா வேகமாக சென்று எழில் பைக்கில் உள்ள கோர்ட் ஆர்டரை எடுத்து வருகிறார். ஈஸ்வரியிடம் அத்தை என்னை மன்னித்துவிடுங்கள் என சொல்லிவிட்டு இன்று கோர்ட் போக வேண்டும் என்று சொல்லி விட்டு, கோபியை பார்த்து போகலாமா என கேட்கிறார். அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!