SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம் இதோ!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கடன் வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - கடன் வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம் இதோ!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கடன் வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம் இதோ!

சமீபத்தில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் கடந்த ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் திருத்தப்பட்ட வட்டி விகிதங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

வட்டி உயர்வு:

நாட்டின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI ) கடந்த ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடன்களுக்கான அதன் விளிம்புச் செலவு விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஓராண்டு கால அவகாசத்திற்கு MCLRஐ தற்போதைய 7.40 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்க வங்கி முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல ஆறு மாத கால அவகாசத்திற்கு, எம்சிஎல்ஆர் 7.35 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாக அதிகரிக்கப்படும். மேலும் இரண்டு வருட காலத்திற்கான எம்சிஎல்ஆர் 7.60 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாகவும் மூன்று வருட காலப்பகுதியில்,7.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக உயர்த்தி இருந்தது.

தமிழக அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை – மேயரின் முக்கிய தகவல்!

இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அதன் கடன் மற்றும் வைப்பு விகிதங்களை கணிசமாக அதிகரித்துள்ளன. அந்த வகையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது. அதாவது, 800 க்கு மேல் கிரெடிட் ஸ்கோரை கொண்ட வாடிக்கையாளர்கள் வழக்கமான வீட்டுக் கடன்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாக 7.55 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்றும் 800 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் கடன் வீட்டுக் கடன்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.55 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!