அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.. விவரம் உள்ளே!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, இன்று (செப்டம்பர் 5) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்பொழுது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங்வி வாதாடுகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த கவிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டது.
ரயிலில் பயணம் செய்ய ஈஸியாக டிக்கெட் வாங்கணுமா..? இத மட்டும் ஃபாலோவ் பண்ணுங்க..!
ஆனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் ஜாமீன் கொடுக்க மறுப்பு ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் வாதம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

























