சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம், செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.. விவரம் உள்ளே!!
இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014 முதல் 2024ம் ஆண்டு வரையிலான வருமானம் செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



























