ரயிலில் பயணம் செய்ய ஈஸியாக டிக்கெட் வாங்கணுமா..? இத மட்டும் ஃபாலோவ் பண்ணுங்க..!

0
ரயிலில் பயணம் செய்ய ஈஸியாக டிக்கெட் வாங்கணுமா..? இத மட்டும் ஃபாலோவ் பண்ணுங்க..!

நடுத்தர மக்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பாதுகாப்பாகவும் , சுலபமாகவும் இருப்பதற்காக ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மேலும், சில நேரங்களில் ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இத்தகைய சூழலை சரிசெய்ய ரயில்வே துறை ” தட்கல்” என்ற டிக்கெட் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த டிக்கெட்டை IRCTC இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இத்தகைய டிக்கெட்களை பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை கீழே விரிவாக காணலாம்.

1. தட்கல் டிக்கெட்டை 1 நாளைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. தட்கல் டிக்கெட் படிவத்தை நிரப்புவதற்கான அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே வைத்திருப்பது நல்லது .

3. ஒரே நேரத்தில் 2 அல்லது 3 டிக்கெட்டுகளை பெற விண்ணப்பித்தால் கண்டிப்பாக அதில் 1 டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

” இவ்வளவு கம்மியான விலையில் IPHONE ஆஹ்”..! இதுவே சரியான நேரம்..

4. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அதில் கேட்கப்படும் கேப்ட்சா குறியீட்டை சரியான முறையில் டைப் செய்வது நல்லது. தவறாக என்டர் செய்து விட்டால் டிக்கெட்டை இழக்கும் சூழல் நேரிடும்.

5.கிரெடிட் கார்டை வைத்து தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல விவரங்களை கொடுக்க வேண்டி வரும். அதனால், யுபிஐ தேர்வு செய்து பணம் செலுத்துவது எளிய முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

6.வார இறுதி நாட்களை விட வார நாட்களில் பயணம் செய்வது எளிதாக டிக்கெட் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!