ITI கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.. தமிழக அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை… முழு விவரம் உள்ளே..

0
ITI ????? ??????? ????????????? ??? ?????????.. ????? ???? ???????? ??????? ??????????... ???? ?????? ?????..
ITI கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.. தமிழக அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை... முழு விவரம் உள்ளே..

ITI கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி.. தமிழக அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை… முழு விவரம் உள்ளே.

 

மாநகர போக்குவரத்து கழகம் மூலம் தமிழகம் முழுவதும் மலிவு விலையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 3000 திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக மு.க.ஸ்டாலின் நடத்தும் குழு மாநாடு.. எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்கின்றன என்று தெரியுமா..?

அதாவது, மாநகர பேருந்துகளை பராமரிக்கக் சென்னையில் பல்வேறு இடங்களில் டிப்போக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவினரும் பணியாற்றி வருகிறார்கள். மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அவ்வப்போது தொழில் பழகுநருக்கான பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி “மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒரு வருடம் ITI தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான மோட்டார் வாகன மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், பெயிண்டர், வெல்டர் ஆகிய பணிகளுக்காக தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக” அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ITI தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு ஏப்ரல் 2-ம் அன்று காலை 10 மணியளவில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக தொழில் பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!