
வரலாற்றில் முதல் முறையாக கண்கள் திறக்கப்பட்ட நீதிதேவதை…!! ” சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது”..!!
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் தலைமையாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், உச்ச நீதிமன்றமானது, முடிவு பெறாத தீர்ப்புகளுக்கு இறுதி தீர்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் நூலகத்தில் உள்ள நீதி தேவதை சிலை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா?? வெளியான முக்கிய தகவல்!!
அதாவது, உச்சநீதிமன்ற நூலகத்தில் உள்ள பழைய நீதி தேவதையின் சிலையானது, கண்களை மூடியும் இடது கையில் வாளை ஏந்தியும் காணப்பட்டது. ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள புதிய “நீதி தேவதை சிலையின் கண்கள் திறக்கப்பட்டும், இடது கையில் அரசியல் சாசனப் புத்தகம் ஏந்தியும் காணப்படுகிறது. மேலும், இச்சிலையானது தற்போது சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.























