உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா?? வெளியான முக்கிய தகவல்!!
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் உள்ளார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதனை மத்திய அரசு ஏற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் அடுத்த மாதம் 11ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி வரை சஞ்சீவ் கன்னா தலைமை நீதிபதியாக பதவிவகிப்பார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
























