போரை நிறுத்த இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்..!! அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. எனவே இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் G 7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தின. இதை தொடர்ந்து, போர் பதற்றம் குறித்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
மீதமுள்ள IPL போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த BCCI முடிவு.. வெளியான முக்கிய தகவல்..!!
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இரு தரப்பிலிருந்தும் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்து போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது X தளத்தில் கூறியது “இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இனி வரும் நாட்களில் இந்தியாவில் எந்த பகுதியிலும் எதாவது ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும் அது போராக கருதப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.


























