மீதமுள்ள IPL போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த BCCI முடிவு.. வெளியான முக்கிய தகவல்..!!
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (BCCI) ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியின் 18 வது பதிப்பானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. மேலும், பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த லீக் போட்டிகளில் அனைத்து அணிகளும் சிறப்பாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால் IPL போட்டிகளை நடத்துவது குறித்து மே 09 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடப்பாண்டு IPL தொடர் 1 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் “மீதமுள்ள 16 போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த BCCI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய 3 மைதானத்தில் மட்டும் நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது”.


























