வெப்ப அலை ஓய்ந்து அடுத்து ஆலங்கட்டி மழை.. 2 நாட்களில் பருவமழை தொடங்கும் – வானிலை அறிக்கை!

0
வெப்ப அலை ஓய்ந்து அடுத்து ஆலங்கட்டி மழை.. 2 நாட்களில் பருவமழை தொடங்கும் - வானிலை அறிக்கை!
வெப்ப அலை ஓய்ந்து அடுத்து ஆலங்கட்டி மழை.. 2 நாட்களில் பருவமழை தொடங்கும் - வானிலை அறிக்கை!
வெப்ப அலை ஓய்ந்து அடுத்து ஆலங்கட்டி மழை.. 2 நாட்களில் பருவமழை தொடங்கும் – வானிலை அறிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையமானது நாடு முழுவதிற்குமான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் அதிக அளவு வெப்பம் நிலவும் என்றும், வெப்ப அலையின் பாதிப்பு காரணமாக பகல் நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகள் வெளியில் வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான வானிலை அறிக்கை நிலவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை..மீனவர்களுக்கு தடை – எச்சரிக்கை அலர்ட்!

அதன்படி,ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கோடை வெப்பம் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பரவலாக வெப்ப அலை ஓய்ந்துள்ளதாகவும், இதனால் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மேலும், 2 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!