
விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி கோபிக்கு விருது இல்லை? கொந்தளிப்பில் ரசிகர் கூட்டம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸிற்கு விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்காமல் இருப்பதால் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
விஜய் அவார்ட்ஸ்
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஸ். அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு கரணம் கோபி கதாபாத்திரம் ஒரு நாள் கொடூரமான வில்லனாகவும், ஒரு நாள் அப்பாவியான சாதுவாகவும் மாறி மாறி காட்டப்படுகிறது. இது மக்களுக்கு ரசிக்கும்படி உள்ளது. மேலும், அந்த கேரக்டரில் சதீஸ் கட்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு முக்கியமான விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி கோபிக்கு எந்த பிரிவிலும் விருது வழங்கப்படவில்லை. பன்முக திறமை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்து வரும் சதீஸிற்கு விருது கொடுக்காமல் இருப்பதால் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். என்ன தான் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.