வட்டி விகிதங்களை குறைத்த முன்னணி வங்கிகள்.. வெளியான முக்கிய தகவல்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

0
????? ?????????? ??????? ??????? ????????.. ??????? ??????? ?????.. ????????????? ????????????????..!!
வட்டி விகிதங்களை குறைத்த முன்னணி வங்கிகள்.. வெளியான முக்கிய தகவல்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

வட்டி விகிதங்களை குறைத்த முன்னணி வங்கிகள்.. வெளியான முக்கிய தகவல்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

 

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி ரெப்போ விகிதமானது 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த முடிவானது பொருளாதார வளர்ச்சியை நிர்வகிக்க மட்டுமின்றி இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள 26 சதவீத வரியையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பாலிசி விகிதம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களின் பென்ஷன் சட்டத்தில் புதிய மாற்றம்.. வெளியான முக்கிய தகவல்..!!

அதாவது, “ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) ரெப்போ விகிதத்தை 0.25 % குறைத்த சில மணி நேரங்களிலேயே பேங்க் ஆஃப் இந்தியா (BOI) மற்றும் யுனைடெட் கமர்ஷியல் வங்கி (UCO) தங்களுடைய வாடிக்கையாளரின் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. மேலும், BOI அதன் ரெப்போ அடிப்படையிலான கடன் வழங்கும் விகிதத்தை 9.10 % இருந்து 8.85 % குறைத்துள்ளது. அதேபோல் UCO வங்கி ரெப்போ உடன் இணைக்கப்பட்டுள்ள கடன் வழங்கும் விகிதத்தை 8.8 % குறைத்துள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது”. இதை தொடர்ந்து, பிற வங்கிகளும் கூடிய விரைவில் தங்களுடைய கடன் வழங்கும் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!